For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அருமையான...சில்லி பன்னீர்!!!

By Maha
|

Chilli Paneer
பால் பொருட்களில் ஒன்றான பன்னீர் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய பன்னீரை வீட்டில் சப்பாத்தி செய்யும் போது ஒரு சைடு டிஸ் ஆக செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும். அத்தகைய சில்லி பன்னீரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

பன்னீருக்கு...

கார்ன் ப்ளார் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கார்ன் ப்ளார், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.

பின் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, அந்த கலவையில் போட்டு, பிரட்டிக் கொள்ளவும். பின் அதன் மேல் சிறிது மைதாவை தூவி விட்டு, 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு வாணலியை எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் இந்த பன்னீர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாய், சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வேண்டுமென்றால் உப்பு சேர்த்து, தீயை அதிகமாக வைத்து, தொடர்ந்து வதக்கவும்.

பின் குடைமிளகாய் ஓரளவு வெந்ததும், தீயை குறைத்து, அதில் பொரித்து வைத்துள்ள பன்னீரை போட்டு, அதில் உள்ள சாஸ் எல்லாம் பன்னீருடன் சேரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.

இப்போது அருமையான சில்லி பன்னீர் ரெடி!!!

English summary

chilli paneer recipe | அருமையான...சில்லி பன்னீர்!!!

Make delicious chilli paneer using this simple recipe from awesome cuisine.
Desktop Bottom Promotion