Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சப்பாத்தி நூடுல்ஸ்
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம். மேலும் இந்த ரெசிபியானது குழந்தைகள் மதிய வேளையில் சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு இருக்கும்.
அது தான் சப்பாத்தி நூடுல்ஸ். இந்த ரெசிபியானது செய்வது மிகவும் ஈஸி. இங்கு அந்த சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா...!

Image Courtesy: sharmispassions
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
முட்டைக்கோஸ் - 1/4 கப் (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
கேரட் - 2 (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 சிறியது (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி!!!
இதுப்போன்று சுவையான வேறு பல ரெசிபிக்களைப் பெற, எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்.



Click it and Unblock the Notifications