For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியான...பீன்ஸ் பொரியல்

By Maha
|

Beans Palya
என்ன தான் வீட்டில் சாப்பாடு, குழம்பு, ரசம் என்று இருந்தாலும், அவற்றிற்கு சைடு டிஸ் ஆக ஏதேனும் பொரியல் இருந்தால் தான் அருமையாக இருக்கும். அவ்வாறு சுவையாக இருக்கும் வகையிலும், ஈஸியாக செய்யக்கூடியதுமான பீன்ஸை வைத்து, ஒரு சூப்பரான பொரியல் செய்து சாப்பிடலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

பீன்ஸ் - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
வர மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் பீன்ஸை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பாசிப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ளவும்.

பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய பாசிப்பருப்பு, நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், சிறிது உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் விட்டு, 1 விசில் விட்டு இறக்கவும்.

பின்னர் விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின் அதில் வேக வைத்துள்ள பீன்ஸ் மற்றும் பாசிப்பருப்பை போட்டு கிளறி, துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி!!!

English summary

beans palya | ஈஸியான...பீன்ஸ் பொரியல்

make delicious beans palya using this simple recipe from awesome cuisine.
Story first published: Wednesday, September 5, 2012, 13:26 [IST]
Desktop Bottom Promotion