Latest Updates
-
பிரியாணியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்திய நகரம் எது தெரியுமா? உங்களுக்கு எந்த பிரியாணி பிடிக்கும்? -
நாவூறும்.. சிக்கன் ரா ரா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
KFC ஸ்டைல் பாப்கார்ன் சிக்கன் ரெசிபி... சிக்கனை இந்த மாதிரி செஞ்சு பாருங்க... எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க... -
சொந்த நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
புதன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்குநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோகங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா? -
கோதுமை மாவும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி செஞ்சு கொடுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
வாழைத்தண்டு வாங்குனா இந்த மாதிரி மோர் கூட்டு செய்யுங்க... வெயில் காலத்துக்கு சூப்பரா குளுகுளுனு இருக்கும்...!
Vazhaithandu Mor Kootu Recipe in Tamil: ஆரோக்கியமான உணவுகள்தான் நம் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆரோக்கிய உணவுகளில் வாழைத்தண்டு மிகவும் முக்கியமானதாகும். உங்கள் வீட்டில் வாழைத்தண்டு உள்ளதா? பொதுவாக வீட்டில் வாழைத்தண்டு இருந்தால், அதைக் கொண்டு பொரியல் அல்லது வழக்கமான கூட்டு என்று தான் செய்வோம். ஆனால் இது வெயில் காலம் என்பதால் வாழைத்தண்டுடன் மோர் சேர்த்து கூட்டு செய்யுங்கள்.
இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு ஆரோக்கியமானதாக மட்டுமின்றி மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு சாம்பார் மற்றும் புளிகுழம்புடன் சாப்பிட அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுவதுடன் சிறுநீரகம் தொடர்பான சிக்கல்களையும் குணப்படுத்தும். வெயில் காலத்தில் இதை அடிக்கடி செய்வது பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

உங்களுக்கு வாழைத்தண்டு மோர் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு மோர் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 வாழைத்தண்டு
- ½ கப் தயிர்
- 5 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
அரைக்க:
- ½ கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் அரிசி மாவு
தாளிக்க:
- 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- வாழைத்தண்டின் தோலை நீக்கி வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர், அதை மெல்லிய துண்டுகளாக வெட்டவும். நறுக்கும் போதே அதிலுள்ள நாரை முழுவதுமாக நீக்கி விடவும்.
- வாழைத்தண்டைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சமைக்கும் வரை, ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் மூழ்க வைத்து வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து அதில் வாழைத்தண்டை போட்டு உப்பு போட்டு வேகவைக்கவும்.
- வாழைத்தண்டு வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் விழுதையும், நன்கு கடைந்த தயிரையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். கொதி வந்ததும், அடுப்பை அணைத்துவிடவும்.
- கூட்டை தாளிக்க ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் இந்த தாளிப்பை வேக வைத்த கூட்டு மீது ஊற்றி நன்றாக கிளறினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி!



Click it and Unblock the Notifications











