Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தோசை மாவு இல்லையா? வீட்டுல மீந்து போன சாதமும், தேங்காயும் இருக்கா? அப்ப இப்படி தோசை செய்யுங்க..
Thengai Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீந்து போன சாதமும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை சுட்டு சாப்பிடுங்கள்.
இந்த தேங்காய் தோசை ருசியாக இருப்பதோடு, மென்மையாகவும் இருக்கும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு 10 நிமிடம் போதுமானது. அந்த அளவில் ஈஸியான பொருட்களைக் கொண்டு சுலபமாக செய்யக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 3/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* அவல் - 1/4 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* புளிச்ச தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி மாவு - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மீந்து போன சாதம், துருவிய தேங்காய்,
அவல், 1/4 கப் தண்ணீர் மற்றும் புளிச்ச தயிரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அத்துடன் பச்சரிசி மாவு, 3/4 கப் தண்ணீர், சுவைக்கேற்ப
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள தோசை மாவை ஊற்றி, லேசாக தோசை போன்று பரப்பி விட
வேண்டும்.
* பின்பு அதில் எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக
வைத்து எடுத்தால், சுவையான தேங்காய் தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











