1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..

Posted By:

Thalicha Thayir Kuzhambu Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது சமையலறையில் நீண்ட நேரம் சமைக்கவும் பிடிக்காது, அதே சமயம் காரசாரமாகவும் சாப்பிட பிடிக்காது. இப்படிப்பட்ட சூழலில் இந்த கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தயிரைக் கொண்டு சிம்பிளாக ஒரு குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த தயிர் குழம்பு 5 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த தயிர் குழம்பை ஒருமுறை செய்தால், கோடைக்காலத்தில் அடிக்கடி இதை செய்வீர்கள். அந்த அளவில் ஈஸியாகவும், ருசியாகவும் இருக்கும்.

Thayir Kulambu How To Make Thalicha Thayir Kuzhambu Recipe

உங்களுக்கு தாளிச்ச தயிர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாளிச்ச தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கெட்டி தயிர் - 1/4 லிட்டர் அல்லது 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (தட்டியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை எடுத்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் கெட்டி தயிரை சேர்த்து, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான தாளிச்ச தயிர் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 9, 2026, 14:49 [IST]
Desktop Bottom Promotion