Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இட்லி, தோசைக்கு இந்த மாதிரி தக்காளி சால்னா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Tomato Salna Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அந்த டிபனுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் தக்காளி இருந்தால், தக்காளி சால்னாவை செய்யுங்கள்.
இந்த தக்காளி சால்னா நீங்கள் வழக்கமாக செய்யும் குருமாவை விட சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னாவை ஒருமுறை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி செய்யுமாறும் கூறுவார்கள்.

உங்களுக்கு தக்காளி சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* பொட்டுக்கடலை - 2 கைப்பிடி
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - 2 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கல்பாசி - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1 சிட்டிகை
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகு - 10
* வெங்காயம் - 1 1/2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை சேர்த்து
வறுக்க வேண்டும்.
* பின் அதில் பாதி வெங்காயம், 1 தக்காளியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, துருவிய தேங்காய்
மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கல்பாசி, ஏலக்காய், சோம்பு, கிராம்பு, பட்டை,
பிரியாணி இலை, அன்னாசிப்பூ, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு
தூவி, நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், கொத்தமல்லி மற்றும் தக்காளியை சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து கிளறி, தேவையான அளவு
நீரை ஊற்றி ஒரு கொதி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி, 5 நிமிடம் உயர் தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து,
பின் குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத்
தூவினால், தக்காளி சால்னா தயார்.



Click it and Unblock the Notifications











