Latest Updates
-
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களிடம் சாத்தானின் குணங்கள் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite Iran war -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...
இட்லிக்கு இப்படி தக்காளி குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Thakkali Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியை தான் பெரும்பாலும் கேட்பார்களா? எப்போதும் ஒரே சுவையில் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா?
அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளி இருந்தால், அந்த தக்காளியைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த தக்காளி குருமாவை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குருமாவை செய்லாம்.

உங்களுக்கு தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* முந்திரி - 5
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 3
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 4
தாளிப்பதற்கு....
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புதினா - 1/2 கைப்பிடி
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 ஸ்பூன்
* கரம் மசாலா - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, பச்சை
மிளகாய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, கசகசா, சோம்பு மற்றும் நறுக்கிய
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, அத்துடன் மிளகாய்
தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கினால், சுவையான தக்காளி குருமா தயார்.



Click it and Unblock the Notifications











