Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
இந்த தமிழ் புத்தாண்டிற்கு ஸ்பெஷலா வீட்டில் இந்த மாதிரி பாயாசத்தை ட்ரை பண்ணுங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்..
Tamil Puthandu Recipes: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவது வழக்கம். நீங்கள் எப்போதும் எந்த ஒரு பண்டிகையானாலும் ஒரே மாதிரியான பாயாசத்தை தான் செய்து சாப்பிடுவீர்களா?
அப்படியானால் இந்த தமிழ் புத்தாண்டிற்கு பாசிப்பருப்பைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாசிப்பருப்பு பாயாசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டம்ளர் டம்ளராக வாங்கி குடிக்கும் அளவில் ருசியாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 6 கப்
* வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* நெய் - 1 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 15 (உடைத்தது)
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து, நிறம் மாறாமல் அதே சமயம் நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய பாசிப்பருப்பை ஒரு வாணலியில் எடுத்து அடுப்பில்
வைத்து, அதில் 6 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க
வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில்
வெல்லத்தை பொடித்து சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி வெல்லம் நன்கு
கரைந்ததும், அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதில் கரைத்த வெல்லத்தை சேர்த்து
நன்கு கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும்,
முந்திரி மற்றும் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி,
கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறி ஒரு கொதி
விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பாயாசம் ஓரளவு வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், 1/2 மூடி தேங்காயை
நீர் சேர்த்து அரைத்து 2 கப் கெட்டியான பாலை எடுத்துக் கொள்ள
வேண்டும். பின் அந்த தேங்காய் பாலை பாயாசத்துடன் சேர்த்து கலந்து
பரிமாறினால், சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.
Image Courtesy: Revi's Foodography



Click it and Unblock the Notifications








