தமிழ் புத்தாண்டுக்கு இந்த புதுமையான பாயாசத்தை ட்ரை பண்ணுங்க, டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்!

Posted By:

Tamil New Year Special Javvarisi Carrot Payasam Recipe In Tamil: தமிழ் புத்தாண்டு வரப்போகிறது. இந்நாளில் அனைவரது வீட்டிலும் வடை பாயாசத்துடன் ஸ்பெஷலாக சமைத்து சாப்பிடும் வழக்கம் இருக்கும். முக்கியமாக ஒரு பண்டிகை அல்லது நல்ல நாள் என்றால் கட்டாயம் பாயாசம் செய்வோம். அதுவும் சிலர் தங்கள் வீடுகளில் எப்போதும் ஒரே மாதிரியான பாயாசத்தை செய்வார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா?

இந்த தமிழ் புத்தாண்டு நாளில் புதுமையான சுவையில் ஒரு அட்டகாசமான பாயாசத்தை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த பாயாசத்தை செய்தால், இதுவரை பாயாசத்தை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Tamil New Year Special Payasam How To Make Pasiparuppu Javvarisi Carrot Payasam

இந்த பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசம் குறித்து அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* நைலான் ஜவ்வரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்

வெல்ல நீருக்கு...

* பொடித்த வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 1/2 கப்

பாயாசத்திற்கு..

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* நறுக்கிய தேங்காய் - 1 கைப்பிடி
* கேரட் - 1 (துருவியது)
* உப்பு - 1 சிட்டிகை
* காய்ச்சி ஆற வைத்த பால் - 2 கப்

செய்முறை:

* முதலில் ஜவ்வரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதேப் போல் பாசிப்பருப்பையும் கழுவிவிட்டு, நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து குக்கரில் ஊற வைத்த ஜவ்வரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, 3 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கலந்து விட வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து ப்ரை செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதையும் முந்திரியுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் துருவிய கேரட்டை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். கேரட் நிறம் மாறியதும், அதில் வேக வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பாயாசம் 2 நிமிடம் கொதித்ததும், அதில், முந்திரி மற்றும் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பாயாசம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அதில் காய்ச்சி ஆற வைத்துள்ள பாலை ஊற்றி நன்கு கிளறினால், சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, April 13, 2026, 18:17 [IST]
Desktop Bottom Promotion