Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம்
பொதுவாக பாயாசத்தை வீட்டு விஷேசங்களின் போது செய்வோம். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் நீங்கள் உங்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் சமைப்பீர்களானால், இந்த வாரம் பலாப்பழ பாயாசத்தை செய்யுங்கள்.
சக்க பிரதமன் என்பது கேரளாவில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான பாயாசம். இது பலாப்பழத்தைக் கொண்டு செய்யக்கூடியது. பொதுவாக பாயாசத்தை வீட்டு விஷேசங்களின் போது செய்வோம். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் நீங்கள் உங்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் சமைப்பீர்களானால், இந்த வாரம் பலாப்பழ பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியானது ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் செய்யக்கூடியது.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த பலாப்பழ துண்டுகள் - 12
* வெல்லம் - 1/2 கப்
* தண்ணீர் 1/4 கப்
* கெட்டியாக தேங்காய் பால் - 3/4 கப்
* நெய் - 3 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பலாப்பழத்தை குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த வாணலியில் வெல்ல நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பாயாசமானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி ஒருமுறை கிளறி இறக்கி விட வேண்டும்.
* இறுதியாக அதில் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் தயார்.
குறிப்பு:
* விருப்பமுள்ளவர்கள் தேங்காய் பால் பாதியும், காய்ச்சிய பால் பாதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* தேங்காய் பால் சேர்த்ததும் கொதிக்க வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் பாயாசம் திரிய ஆரம்பித்துவிடும்.
* பாயாசத்தின் சுவையை இன்னும் அதிகரிக்க நினைத்தால், அதிகமாக நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications