Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்ய போறீங்க?
பண்டிகை என்றாலே பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். அதிலும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையில் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டில் கேதார கௌரி விரதத்தை மக்கள் மேற்கொள்வர். இந்த விரதமானது 21 நாட்கள் கடைபிடிக்கப்படும். ஆனால் தற்போது இந்த விரதத்தை அனைவராலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால், அமாவாசை அன்று வரும் தீபாவளி அன்று முடியும் அந்த விரதத்திற்கு மக்கள் பல இனிப்புகள் மற்றும் காரங்களை செய்து, அம்மனுக்கு படைத்து வணங்குவர்.
அதிலும் அந்த பூஜையில் வைக்கும் பலகாரங்கள் ஒவ்வொன்றையும் 21 ஆக வைத்து பூஜை செய்வர். இதனால் அந்த பூஜைக்கு என்ன பலகாரங்கள் செய்வது என்று தெரியாமல் இருந்தால், இங்கு ஒரு சில ஈஸியான இனிப்புகளை கொடுத்துள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இந்த இனிப்புகளை செய்து பூஜை செய்து சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து, இனிமையாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.

கோதுமை அப்பம்
வீட்டில் ஈஸியாகவும், விரைவில் செய்து முடிக்கக்கூடியதுமான வகையில் இருக்கும் ஒரு வகையான இனிப்பு தான் அப்பம். அதை வீட்டில் இருக்கும் அன்றாடப் பொருளான கோதுமை மாவினால் செய்தால், அதன் சுவையே தனி. இதன் செய்முறையை அறிய, இதை கிளிக் செய்யவும்.

அதிரசம்
தீபாவளியன்று செய்யப்படும் இனிப்புகளில் முக்கியமானது தான் அதிரசம். ஏனெனில் இந்த நாளில் முடியும் விரதத்திற்கு அதிரசம் தான் பொதுவாகச் செய்யப்படும். இத்தகைய அதிரசத்தை எப்படி ஈஸியாக செய்வதென்று அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்.

ஜிலேபி
ஜிலேபி என்றதுமே அனைவரும் நா ஊறும். அந்த வகையில் அது அதன் சுவையால் அனைவரும் ஈர்த்துள்ளது. இதுவரை அந்த ஜிலேபியை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதை வீட்டில் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், இங்கு கிளிக் செய்யுங்கள்.

பிரட் ஜாமூன்
பண்டிகை வந்தாலே குழந்தைகளுக்கு வீட்டில் செய்யும் இனிப்புகளை சாப்பிடுவோம் என்ற ஆசையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த இனிப்புகளில் குலாப் ஜாமூன் என்றால் விரும்பி சாப்பிடுவர். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக பிரட் ஜாமூனை செய்து கொடுக்கலாமா? அப்படியெனில் இங்கு கிளிக் செய்யுங்கள்.

கேசார் குல்பி
குல்பி பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஏன் பண்டிகை என்றால் இனிப்புகள் மட்டும் தான் செய்ய வேண்டுமா என்ன? ஐஸ் அல்லது குல்பியெல்லாம் செய்யக்கூடாதா என்ன? ஆகவே இந்த தீபாவளிக்கு வித்தியாசமாக குல்பியை செய்யலாமா? அதன் செய்முறையை தெரிந்து கொள்ள, இங்கு கிளிக் செய்யவும்.

சோன் பப்டி
தீபாவளி அன்று எந்த கடைகளும் இருக்காது. இதுவரை வீதியில் தான் சோன் பப்டியை வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த சுவையான சோன் பப்டியை, தீபாவளி ஸ்பெஷலாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதை எப்படி செய்வதென்று அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்.

செட்டிநாடு கை முறுக்கு
பலகாரம் என்றாலே அதில் முதலில் நினைவுக்கு வருவது முறுக்கு. அந்த முறுக்கு வகைகளில், கைகளால் சுற்றி செய்யப்படும் கை முறுக்கின் சுவை அலாதியானது. ஆகவே அந்த கை முறுக்கை செட்டிநாடு ஸ்டைலில் வீட்டில் தீபாவளிக்கு செய்து அசத்த ரெடியாக இருந்தால், இதை கிளிக் செய்யுங்கள்.

பாசிப்பருப்பு நெய் உருண்டை
பாசிப் பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதில் எளிதான ஏராளமான பலகாரங்களை செய்யலாம். பாயசம், நெய் உருண்டை போன்றவைகள் பாரம்பரியம் மிக்கவை. பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்து மிக்கது. இதனை தீபாவளிக்கு செய்தால் நன்றாக இருக்கும். இதன் செய்முறையை அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்.

மோத்தி சூர் லட்டு
லட்டு என்றால் அனைவருக்கு ஞாபகம் வருவது திருப்பதி தான். ஏனெனில் திருப்பதி சென்றால், அங்கு பிரசாதமாக லட்டை தான் வழங்குவார்கள். அத்தகைய லட்டு பலகாரம், பூஜை செய்யும் போது வீட்டில் செய்து படைக்க சிறந்ததாக இருக்கும். அத்தகைய லட்டுவை எப்படி செய்ய வேண்டுமென்பதை தெரிந்து கொள்ள, இதை கிளிக் செய்யவும்.

கடலைப்பருப்பு ஸ்வீட்
ஸ்வீட் என்றால் பிடிக்காதவர்களே இல்லை. அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் பருப்பை வைத்து செய்யும் ஸ்வீட்டின் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. இப்போது அந்த பருப்பு வகையில் கடலைப்பருப்பை வைத்து எப்படி ஸ்வீட் செய்வதென்று பார்ப்போமா!!!



Click it and Unblock the Notifications