For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொறு மொறு செட்டிநாடு கை முறுக்கு

By Mayura Akilan
|

Murukku
முறுக்கு வகைகளில், கைகளால் சுற்றி செய்யப்படும் கை முறுக்கின் சுவை அலாதியானது. மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சிற்றுண்டி.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 3 கப்

உளுத்தம் மாவு - கால் கப்

டால்டா - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சீரகம் – 100 கிராம்

வெண்ணெய் - அரை கப்

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

முறுக்கு செய்முறை

அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.

ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.

முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.

சுவையான கை முறுக்கு ரெடி. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சிற்றுண்டி இது.

English summary

Chettinadu Kai Murukku Recipe | மொறு மொறு செட்டிநாடு கை முறுக்கு

Kai Murukku is South Indian Snack of crisp rice spirals. Murukku is an auspicious snack for weddings in all South Indian states.
Story first published: Tuesday, March 13, 2012, 15:53 [IST]
Desktop Bottom Promotion