For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

By Maha
|

Soan Papdi
சோன் பப்டியை இதுவரை வீதியில் விற்றுக் கொண்டு வரும் போது தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த சுவையான சோன் பப்டியை, தீபாவளி ஸ்பெஷலாக வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். இப்போது அந்த சோன் பப்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 1/2 கப்
மைதா - 1 1/2 கப்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 1/2 கப்
ஏலக்காய் பவுடர் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
பாலிதீன் ஷீட் - 1
நெய் - 250 கிராம்

செய்முறை:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.

பின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும்.

பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும்.

இப்போது சூப்பரான சோன் பப்டி ரெடி!!!

English summary

Soan Papdi: Soft Diwali Sweet | தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி

Soan papdi or soan papdi or sonpapri is a square shaped crispy and flaky sweet dish. The recipe is very easy and you can prepare it at home itself. Check out the recipe to make soan papdi.
 
Desktop Bottom Promotion