Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
Dubai Airport Alert for Indians: Don't Come Unless Flight Confirmed! Amid War Tensions -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக? | SBI Bank Card Reward Points New Rules April 1 -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
சர்க்கரைவள்ளிக் கிழங்கும், 2 கைப்பிடி தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. சத்தானதும் கூட..
Sweet Potato Kozhukattai Recipe In Tamil: தற்போது சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீசன். இந்த சீசனில் இந்த கிழங்கை வாங்கி சாப்பிட்டால் தான் உண்டு. உங்கள் வீட்டில் உள்ளோர் சர்க்கரைவள்ளிக் கிழங்கை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கொண்டு கொழுக்கட்டை செய்து கொடுங்கள்.
இப்படி கொழுக்கட்டை செய்யும் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கொழுக்கட்டை ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. ஒருமுறை இப்படி செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு...
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
* தேங்காய் - 2 கைப்பிடி
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* நாட்டுச்சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
மேல் மாவிற்கு....
* அரிசி மாவு - 1 கப்
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* நெய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சிறு
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு, 2
கைப்பிடி நறுக்கிய தேங்காய் துண்டுகள், 2 ஏலக்காய் சேர்த்து, 1/2
டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1
கைப்பிடி துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 1 டம்ளர் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தட்டில் நெய்யை தடவி, அதில் முதலில் அரிசி மாவு கலவையை
பாதியை சேர்த்து பரப்பி விட வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதனுள்
இட்லி தட்டி கவிழ்த்து வைத்து, அதன் மேல் இந்த தட்டை வைத்து, மூடி 1
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 1 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதன் மேல் சர்க்கரைவள்ளிக்
கிழங்கு கலவையை பரப்பி, மீண்டும் மூடி 1 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின் 1 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதன் மேல் மீதமுள்ள அரிசி
மாவை பரப்பி மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வேக வைத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக கத்தியால் அதை முக்கோண துண்டுகளாக வெட்டினால், சுவையான
சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications











