Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சுரைக்காய் இருந்தா.. 10 நிமிடத்தில் சட்டுன்னு இப்படி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அள்ளும்..
Suraikkai Kadayal Recipe In Tamil: மழை நேரத்தில் சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் வாய்க்கு ருசியான சமையலையும் சமைக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கடைந்து சாப்பிடுங்கள். இந்த சுரைக்காய் கடையல் 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.
அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த சுரைக்காய் கடையலை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். முக்கியமாக இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் சுரைக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு இப்படி சுரைக்காயை செய்து கொடுக்கும் போது கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சுரைக்காய் கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 5 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுரைக்காய் - 150 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வரமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிய
துண்டு புளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்,
பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து கிளறி, காய்
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு மசித்து விட
வேண்டும்.
* பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க
வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான சுரைக்காய் கடையல்
தயார்.



Click it and Unblock the Notifications











