Latest Updates
-
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது.. -
IPL 2026: தோனி ஏன் 'தல' அழைக்கப்படுகிறார்? எப்போதிருந்து தோனிக்கு இந்த பெயர் வந்தது தெரியுமா? -
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...! -
மதியம் சீக்கிரம் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த துவையலை செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? டெல்லியும் அல்ல, மும்பையும் அல்ல...! -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல அழற்சி அதிகமா இருக்கு-ன்னு அர்த்தமாம்.. -
குரு-புதன் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
5 மாதங்களில் 2 முறை நடக்கும் குருப்பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
4 தக்காளி, 2 வெங்காயம் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. குழப்பி அடிப்பாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனநிம்மதியான நாளாக இருக்குமாம்...!
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்..
Summer Special Carrot Drink Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீயை அதிகம் குடிப்பார்களா? உங்கள் வீட்டில் உள்ளோரிடம் உள்ள இந்த பழக்கத்தை குறைக்க வேண்டுமா? அப்படியானால் வீட்டில் கேரட் இருந்தால், அந்த கேரட்டைக் கொண்டு ஒரு ஹெல்த்தியான பானத்தை தயாரித்து கொடுங்கள்.
அதுவும் இந்த பானத்தில் கேரட் மட்டுமின்றி, பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்கப்படுவதால், இது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியதால் ஆரோக்கியமானதும் கூட.

இந்த கேரட் பானத்தை காபி, டீ-க்கு பதிலாக தினமும் குடித்து வரும் போது, கண்ணாடி அணிய வேண்டியதன் அவசியமே இருக்காது. முக்கியமாக இந்த கேரட் பானத்திற்கான பேஸ்ட்டை ஒருமுறை செய்து வைத்தால், 3 நாட்கள் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த கேரட் பானத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் பானம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 400 கிராம்
* பேரிச்சம்பழம் - 5
* பாதாம் - 10
* முந்திரி - 6
* ஏலக்காய் - 3
* தண்ணீர் - தேவையான அளவு
பானம் தயாரிப்பதற்கு...
* பால் - 1/2 லிட்டர்
* பேஸ்ட் - 5 டேபிள் ஸ்பூன்
* நாட்டுச்சர்க்ரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கேரட்டை நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு,
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட கேரட்டை சேர்த்து, அத்துடன்
விதைகளை நீக்கிய 5 பேரிச்சம் பழம், 10 பாதாம், 6 முந்திரி மற்றும் 3
ஏலக்காயை சேர்க்க வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் பாதாமை மட்டும் வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட
வேண்டும்.
* பிறகு வேக வைத்த பொருட்கள் அனைத்தும் குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில்
சேர்த்து, அத்துடன் வேக வைத்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு டப்பாவில் சேர்த்து, மூடி வைத்து, ஃப்ரிட்ஜ்ஜில்
வைத்தால் 3-4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ந்த
பின், அதில் அரைத்து வைத்துள்ள கேரட் பேஸ்ட்டில் 5 டேபிள் ஸ்பூன்
எடுத்து சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பாலானது நன்கு கொதித்து, பால் ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், அதை
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பால் ஓரளவு குளிர்ந்த பின், அதில் 2 டேபிள் ஸ்பூன் நாட்டு
சர்க்கரையை சேர்த்து கலந்து பரிமாறினால், சுவையான மற்றும் சத்தான
கேரட் ட்ரிங்க் தயார்.



Click it and Unblock the Notifications







