Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Carrot Benefits In Tamil: காய்கறிகளை தினமும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் ஒருசில காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். மேலும் பச்சையாக சாப்பிடக்கூடியவாறான காய்கறிகள் அனைத்துமே சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காய்கறி தான் கேரட்.
கேரட்டுகள் கண்ணைக் கவரும் நிறத்தைக் கொண்டதோடு, இனிப்புச் சுவையுடன் இருக்கும். இதனால் இது நிறைய பேரின் விருப்பமான காய்கறியாக உள்ளது. கேரட்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண்களில் எவ்வித பிரச்சனைகளும் வராமல், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. இது தவிர, இதில் வைட்டமின் சி, லுடீன், ஜியாக்சாண்டின், வைட்டமின் கே, டயட்டரி நார்ச்சத்து போன்றவையும் அதிகமாக உள்ளன.
அதுவும் கேரட்டை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கீழே தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. கண்களுக்கு நல்லது
உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால், அது கண் வறட்சியை ஏற்படுத்தி, பார்க்கும் திறனை பாதிக்கும். இந்த குறைபாடு முற்றிய நிலையில் மாலைக்கண் நோய் ஏற்படும். ஆனால் கேரட்டில் இந்த வைட்டமின் ஏ, லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கண் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள் போதும்.
2. எடை இழப்புக்கு உதவும்
கேரட், ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிடாமல் கேரட்டை சாப்பிட்டால், உடல் எடை இன்னும் வேகமாக குறையும். ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.
3. சரும ஆரோக்கியம் மேம்படும்
நீங்கள் உங்கள் அழகை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு மிகச்சிறந்த வழி தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது தான். ஆம், கேரட்டை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கரோட்டீன், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கேரட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டுமானால், வைட்டமின் சி உடலில் வளமான அளவில் இருக்க வேண்டும். கேரட்டை உட்கொள்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை நோயெதிப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ளும்.
5. இதய ஆரோக்கியம் மேம்படும்
கேரட் போன்ற வண்ணமயமான காய்கறிகளை எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது உட்கொண்டு வந்தால், அது எடையைக் குறைக்க உதவுவதோடு, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரட்டில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள்.
6. செரிமான மண்டலத்திற்கு நல்லது
கேரட்டில் நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகளவில் உள்ளன. இவை இரண்டுமே செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்துக்களாகும். கேரட்டை தினமும் உட்கொண்டு வந்தால், இதில் உள்ள கரோட்டினாய்டுகள் குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே செரிமான பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள்.
7. எலும்புகளுக்கு நல்லது
கேரட்டில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிக அளவில் இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை. ஆகவே கேரட்டை தினசரி உட்கொண்டு வருவதன் மூலம், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
8. சர்க்கரை நோய்க்கு நல்லது
கேரட்டில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. எனவே சர்க்கரை நோயாளிகள் கேரட்டை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக கேரட்டில் சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது டைப்-2 சர்க்கரை நோயைத் தடுக்க உதவி புரியும். ஒருவேளை ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால், கேரட்டை உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications