Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சிக்கன் வாங்குனா.. ஒருவாட்டி இந்த மாதிரி செய்யுங்க.. சப்பு கொட்டி சாப்பிடுவாங்க...
Spicy Chicken Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் அடிக்கடி எடுப்பீர்களா? எப்போது சிக்கன் வாங்கினாலும் ஒரே மாதிரியான சுவையில் தான் சிக்கனை செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஸ்பைசி சிக்கனை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
இந்த சிக்கனை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், சப்பு கொட்டி சாப்பிடுவதோடு, செய்த உங்களுக்கே கிடைக்காது. அந்த அளவில் நொடியில் காலி செய்துவிடுவார்கள். இந்த சிக்கன் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ஸ்பைசி சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்பெசி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1/2
* மல்லித் தூள் - 1/2
* கரம் மசாலா - 1/4
* மிளகுத் தூள் - 1/2
* சீரகத் தூள் - 1/2
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* தயிர் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மசாலாவிற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
தாளிப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 5 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம்
மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை
சாறு, தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, வரமிளகாய்,
மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி,
வெங்காயத்தை மட்டும் எடுத்து, ஜாரில் போட்டு, அத்துடன் வறுத்து
வைத்துள்ள மசாலா பொருட்களையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை
சேர்த்து, நன்கு ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சிக்கன் வறுத்து அதே எண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம்,
வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் ப்ரை செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு
கிளறி, நீர் சுண்டும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான ஸ்பைசி சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications











