மொறுமொறுப்பான... ரவா கட்லெட்

Posted By:
Subscribe to Boldsky

மாலையில் எப்போது பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக ரவையைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். இது காபி, டீ குடிக்கும் போது சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

சரி, இப்போது அந்த ரவா கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tasty and Crispy Rawa Cutlet Recipe

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப்

ஸ்வீட் கார்ன் - 1/4 கப்

குடைமிளகாய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1

வெங்காயம் - 1/4 கப்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

பிரட் தூள் - சிறிது

மைதா - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, ரவை, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சிறிது உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 2-3 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் மைதாவை தண்ணீர் சேர்த்து சற்று ஓரளவு தண்ணீர் போல கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, ரவா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உங்களுக்கு பிடித்த வடிவில் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின் தட்டி வைத்துள்ளதை ஒவ்வொன்றாக எடுத்து, மைதாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, பின் ஒருமுறை மீண்டும் தட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா கட்லெட் ரெடி!!!

English summary

Tasty and Crispy Rawa Cutlet Recipe

Want to know how to prepare rawa cutlet recipe? Check out and give it a try...
Story first published: Tuesday, June 21, 2016, 17:39 [IST]
Subscribe Newsletter