For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெண்டைக்காய் சிப்ஸ்

By Maha
|

மாலையில் அனைவருக்குமே டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.

சரி, இப்போது அந்த வெண்டைக்காய் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 10-15
குடைமிளகாய் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் சிப்ஸ் ரெடி!!!

English summary

Snack Recipe: Spicy Ladies Finger Chips

On evening, all you need to do is to prepare a spicy snack. So, read to know how to prepare spicy ladies finger chips recipe.
Desktop Bottom Promotion