For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

|

தென்னிந்தியாவின் கர்நாடகாவில் கொடுபலே என்னும் அரிசி முறுக்கு மிகவும் பிரபலமானது. இது காரமாகவும், ருசியாகவும் இருக்கும். மாலையில் டீ, காபி குடிக்கும் போது, இது சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். நீங்களும் மாலையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க நினைத்தால், இந்த முறுக்கை செய்து சுவையுங்கள்.

இங்கு அந்த கொடுபலே என்னும் கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
மிளகாய் தூள் - 1/4 கப்
மிளகு - 4-5
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம், மிளகு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்ததை பாத்திரத்தில் உள்ள மாவுடன் சேர்த்து, சிறிது உப்பு தூவி, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த மாவை கொஞ்சமாக எடுத்து, திரி போல் திரித்து, பின் முறுக்கு போன்று சுற்றிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு ரெடி!!!

English summary

Crispy Kodubale/Rice Flour Rings

Crispy Kodubale or rice flour rings is really a yummy snack and is very famous in Karnataka. Do you know how to prepare this snacks? Check out and give it a try...
Desktop Bottom Promotion