Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
இட்லி, தோசைக்கு ஏற்ற ரோட்டுக்கடை புதினா சட்னி... எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Rottukadai Pudina Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னியைத் தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில், ஒரே மாதிரியான சட்னியைத் தான் அடிக்கடி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புதினா சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ரோட்டுக்கடை ஸ்டைலில் புதினா சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இப்படி புதினா சட்னியை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ரோட்டுக்கடை புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* புதினா - 1 கட்டு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 3 பல்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் புதினாவை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, புதினா
இலைகள் லேசாக சுருங்கும் வரை வதக்கி, அதையும் ஒரு தட்டில் எடுத்து
வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் தக்காளியை சேர்த்து, அத்துடன் புளி மற்றும்
உப்பு சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய தக்காளி, புதினா சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை நன்கு தட்டி அப்படியே தோலோடு போட்டு நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய்
பிரியத் தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான
ரோட்டுக்கடை புதினா சட்னி தயார்.
Image Courtesy: Cook with Sangeetha



Click it and Unblock the Notifications











