Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு கோபி கிரேவி
Restaurant Style Aloo Gobi Gravy: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ரெஸ்டாரண்ட்டில் கொடுக்கப்படும் சைடு டிஷ்களை விரும்பி சாப்பிடுவார்களா?
அப்படியானால் அந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ஒரு கிரேவியை செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் ஆலு (உருளைக்கிழங்கு) மற்றும் கோபி (காலிஃப்ளவர்) உள்ளதா? அப்படியென்றால் அந்த இரண்டையும் கொண்டு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு கோபி கிரேவி செய்யுங்கள்.

இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு கோபி கிரேவி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு கோபி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 3 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 8
பிற பொருட்கள்...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 1 கப்
* காலிஃப்ளவர் - 2 கப் (சுடுநீரில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள்
)
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க
வைக்க வேண்டும். நீர் கொதித்ததும், காலிஃப்ளவர், உப்பு மற்றும் சிறிது
மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக
வைத்து இறக்கி, காலிஃப்ளவரை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 20 நொடிகள் கிளற
வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து 5 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி,
சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு காலிஃப்ளவரை சேர்த்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தி, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத்
சேர்த்து கிளறினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு கோபி கிரேவி
தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications











