Latest Updates
-
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தேங்காய் சட்னியை அரைக்கும் போது இந்த 2 பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Red Coconut Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் பெரும்பாலும் தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னியை செய்து போடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னி செய்யும்போது, அத்துடன் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, பொட்டுக்கடலை எதுவும் சேர்க்காமல் அரைத்துப் பாருங்கள்.
இப்படி செய்யும் போது சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியின் ஸ்பெஷலே வரமிளகாய் தான். எனவே உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் இந்த சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வரமிளகாய் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/4 மூடி
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 பல்
* புளி - சிறு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1 (விதைகளை நீக்கியது)
செய்முறை:
* முதலில் அரை மூடி தேங்காயை எடுத்து, அதை சிறு துண்டுகளாகவோ
அல்லது துருவியோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துருவிய தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, புளி, உப்பு மற்றும் சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சட்னி கெட்டியாக இருந்தால், தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான வரமிளகாய்
தேங்காய் சட்னி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications











