Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பழுத்த மிளகாய் இருந்தா தூக்கிப்போடாம.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க... இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்..
Red Chilli Onion Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுத்துவிட்டீர்களா? இன்னும் இல்லையா? அப்படியானால் உங்கள் வீட்டில் நிறைய பச்சை மிளகாய் வாங்கி, அதில் சில பழுத்துவிட்டதா? அப்படி பழுத்த மிளகாயை தூக்கி தான் போடுவீர்களா?
அப்படியானால் இனிமேல் அந்த மிளகாயை தூக்கிப் போடாமல், அதைக் கொண்டு அருமையான சட்னியை செய்யுங்கள். இந்த பழுத்த மிளகாய் வெங்காய சட்னி இட்லி, தோசை, பணியாரம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்ய அளவான பொருட்களே போதுமானது. அதுவும் இந்த சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு பழுத்த மிளகாய் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பழுத்த மிளகாய் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பழுத்த மிளகாய் - 6
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* புளி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பழுத்த மிளகாயை எடுத்து, அதை இரண்டாக வெட்டி, நடுவே உள்ள
விதைகளை அகற்றி விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் 10 பற்கள் பூண்டு, 1 சிறிய துண்டு புளி
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 கைப்பிடி சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் 2
கொத்து கறிவேப்பிலையையும் தூவி, வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது உப்பு
தூவி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், 1/4 டீஸ்பூன் கடுகு,
உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய 3
சின்ன வெங்காயம் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதக்கி
இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பழுத்த மிளகாய்
வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











