Latest Updates
-
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...!
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க..
Ramadan Special Mutton Nombu Kanji Recipe In Tamil: ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களில் தெருவே மணக்கும் வகையிலான சுவையான நோன்பு கஞ்சி வழங்கப்படும். இந்த கஞ்சியை நோன்பு முடிந்ததும் இஃப்தார் வேளையில் இஸ்லாமிய மக்கள் குடிப்பார்கள். இந்த கஞ்சி சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
இந்த நோன்பு கஞ்சியை மூன்று விதமாக செய்யலாம். அதில் காய்கறிகள் சேர்த்து சைவ நோன்பு கஞ்சியாகவோ அல்லது மட்டன் அல்லது சிக்கன் சேர்த்து அசைவ நோன்பு கஞ்சியாகவோ தயாரிக்கலாம்.

உங்களுக்கு இந்த நோன்பு கஞ்சி பிடிக்குமா? அப்படியானால் அதை உங்கள் வீட்டிலேயே குக்கரில் ஈஸியாக செய்து சாப்பிடலாம். அதுவும் உங்களுக்கு மட்டன் நோன்பு கஞ்சி பிடிக்குமானால், 100 கிராம் மட்டன் கொத்துக்கறி இருந்தால் போதும் அட்டகாசமாக நோன்பு கஞ்சி செய்து சுவைக்கலாம்.
உங்களுக்கு மட்டன் நோன்பு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் நோன்பு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சரிசி நொய் - 250 கிராம்
* பாசிப்பருப்பு - 100 கிராம்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
* உப்பு - 1/2 ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* சோம்பு - 1/2 ஸ்பூன்
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* மட்டன் கொத்துக்கறி - 100 கிராம்
* கடலை எண்ணெய் - 50 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - 2 1/2 லிட்டர்
செய்முறை:
* முதலில் அரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் பாசிப்பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, கொத்தமல்லி,
புதினா, பச்சை மிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மிளகாய் தூள்
மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சோம்பு, வெந்தயம் சேர்த்து கிளறி, பின் கொத்து கறியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரை மணிநேரம் ஊற வைத்த பாசிப்பருப்பை கழுவி சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 1/2 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும். பாசிப்பருப்பானது வெந்ததும், அதில் ஊற
வைத்துள்ள அரிசியை கழுவி சேர்த்து கிளறி, மூடி வைத்து, உயர் தீயில்
வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, குக்கர் மூடியைத் திறந்தால், சுவையான மட்டன்
நோன்பு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications








