Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நாவூறும்.. மதுரை மட்டன் கொத்துக்கறி குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Madurai Mutton Kothukari Kuzhambu Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் மட்டனாக வாங்காமல், ஒருமுறை மட்டன் கொத்துக்கறியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் மட்டன் கொத்துக்கறியை வாங்கி வந்து, மதுரை ஸ்டைலில் குழம்பு வைத்து சாப்பிட்டால், சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
முக்கியமாக இந்த மட்டன் கொத்துக்கறி குழம்பு சூடான சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். ஒருமுறை மதுரை மட்டன் கொத்துக்கறி குழம்பை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு மதுரை மட்டன் கொத்துக்கறி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை மட்டன் கொத்துக்கறி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மட்டன் கொத்துக்கறி - 1/4 கிலோ
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு,
சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலிணை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, பின்
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூளை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் குழம்ப மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள பவுடர்,
வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் மட்டன் கொத்துக்கறியை நீரில் கழுவி சேர்த்து நன்கு
கிளறி, 1 கப் நீரை ஊற்றி பிரட்டி, மூடி வைத்து 10-15 நிமிடம் குறைவான
தீயில் வேக வைத்து இறக்கினால், மதுரை மட்டன் கொத்துக்கறி குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications