இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. வயிற்றுக் கொழுப்பு கரைஞ்சு வேகமா ஒல்லியாவீங்க..

Posted By:

Ragi Pasipayaru Kanji Recipe In Tamil: நீங்க குண்டா இருக்கீங்களா? உங்க தொப்பையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா? தினமும் அதற்காக உடற்பயிற்சி செய்து, டயட்டில் இருந்து வருகிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் இந்த கஞ்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ராகி மற்றும் பச்சை பயறு சேர்த்து செய்யக்கூடிய இந்த கஞ்சி உடல் எடையையும், தொப்பையையும் குறைக்க பெரிதும் உதவி புரியும். அதுவும் இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடித்து வந்தால், குறுகிய நாட்களில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Ragi Pasipayaru Kanji How To Make a Ragi Green Moong Dal Kanji

அந்த அளவில் இது கொழுப்பைக் கரைப்பதில் சிறந்தது. நீங்கள் இதுவரை காலையில் சுவையில்லாத ஏதாவது ஒரு உணவைத் தான் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால், இனிமேல் இந்த கஞ்சியை செய்து குடியுங்கள். இது சத்தானது மட்டுமின்றி, சுவையானதும் கூட.

உங்களுக்கு ராகி பாசிப்பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பச்சைப்பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பயறு - 100 கிராம்
* நெய் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

பால் எடுப்பதற்கு...

* முளைக்கட்டிய ராகி - 150 கிராம்
* தேங்காய் - பெரிய துண்டு
* பாதாம் - 8
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் பாசிப்பயறை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வீட்டில் முளைக்கட்டிய ராகி இருந்தால், அதைப் பயன்படுத்தலாம். ஒருவேளை அது இல்லாவிட்டால், ராகியை நீரில் கழுவி, 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை ஒரு ஈரத்துணியில் கட்டி, ஒரு இரவு முழுவதும் முளைக்கட்ட வைத்தால், முளைக்கட்டிய ராகி தயார்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த பாசிப்பயறை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பயறு வேக வைக்கத் தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முளைக்கட்டிய ராகி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஊற வைத்த 8 பாதாமை தோல் நீக்கிவிட்டு சேர்த்து, முதலில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்தத்தை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மீண்டும் வடிகட்டிய சக்கையை ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்து, அதையும் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், எடுத்து வைத்துள்ள பாலை சேர்த்து நன்கு கிளறி விட்டு, சற்று கெட்டியாகத் தொடங்கும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள பாசிப்பயறை மசித்து சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, மிளகுத் தூள் தூவி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ராகி பச்சைப்பயறு கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, April 5, 2025, 8:10 [IST]
Desktop Bottom Promotion