Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
இட்லிக்கு இந்த பூண்டு மிளகாய் சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Poondu Milagai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி செய்வீர்களா? பொதுவாக இட்லிக்கு சட்னி, சாம்பார் சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் சட்னியை எடுத்துக் கொண்டால், தேங்காய் சட்னி, புதினா சட்னி, மல்லிச் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என நிறைய சட்னிகள் உள்ளன.
சொல்லப்போனால் இந்த சட்னிகளைத் தான் நிறைய பேர் தங்கள் வீடுகளில் அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? உங்களுக்கு இப்படி ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பூண்டும், வரமிளகாயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்யுங்கள்.

இந்த சட்னியை ஒருமுறை செய்தால் பின் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த சட்னியின் சுவை அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். மேலும் இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
உங்களுக்கு பூண்டு மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 40 பல்
* வரமிளகாய் - 10
* புளி - சிறிய துண்டு
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் சேர்த்து, அத்துடன் புளியை சேர்த்து
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி மென்மையானதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக சட்னியில் நீரை அதிகம் ஊற்றி விட வேண்டும். இந்த சட்னி
சற்று கெட்டியாக இருந்தால் தான், இட்லியுடன் சாப்பிட நன்றாக
இருக்கும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பூண்டு
மிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











