Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
பீர்க்கங்காயை வெச்சு இப்படி குழம்பு வையுங்க.. சாத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்...
Peerkangai Paal Kuzhambu: இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு பால் குழம்பு செய்யுங்கள்.
இந்த பீர்க்கங்காய் பால் குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது நீங்கள் வழக்கமாக செய்யும் குழம்பை விட சற்று வித்தியாசமாக இருக்கும். அதோடு இந்த குழம்பை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் சீக்கிரம் செய்யக்கூடியது.

உங்களுக்கு பீர்க்கங்காய் பால் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் பால் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் - 500 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* காய்ச்சிய பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயை கழுவி, தோலை நீக்கிவிட்டு, சிறு
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பீர்க்கங்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
சாம்பார் தூள், உப்பு மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 6-7 நிமிடம் பீர்க்கங்காய் வேகும் வரை
வேக வைக்க வேண்டும்.
* நீரானது வற்றி பீர்க்கங்காய் வெந்ததும், அதில் 1 கப் பாலை ஊற்றி
கிளறி, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான பீர்க்கங்காய் பால் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











