Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
பாசி பயிறை வைச்சு இந்த மாதிரி கஞ்சி வைச்சு குடிச்சு பாருங்க... எடை மடமடன்னு குறையும்...!
Pasi Payaru Kanji Recipe in Tamil: கஞ்சி ஒரு சிலருக்கு பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று. சிலருக்கு பிடிக்காது. சிலருக்கு கஞ்சியை உணவாக எடுத்து கொண்டால் உடல் எடைஅதிகரிக்கும் என்கிற கவலை இருக்கும். ஆனால் இது மாறாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலில் நீர்சத்து குறைவையும் சரி செய்கிறது. இதன் மூலம் எடையை வேகமாக குறைக்கும். சரி வாங்க பாசி பயறு காய்கறி கஞ்சி எப்படி செய்வது என பார்க்கலாம்.

- அரிசி - 1/2 கப்
- பாசி பயிறு - 1/2 கப்
- கேரட் - 1
- வெள்ளரிக்காய் - ½ (பாதி அளவு)
- பீன்ஸ் - 5
- தக்காளி - 1
- சின்ன வெங்காயம் - 10 அல்லது 12
- பூண்டு - 6 பல்
- வெந்தயம் - ½ டீ ஸ்பூன்
- மிளகு - ¼ டீ ஸ்பூன்
- எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பாசி பயறை சேர்த்து மூன்று முறை
நன்றாக கழுவி கொள்ளவும்.
- பின் அரிசி மற்றும் பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை
மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து
கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி
சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின் அவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை தண்ணீரில் கழுவி காம்பு பகுதியை
நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுத்து கேரட், வெள்ளரிக்காய், மற்றும் பீன்ஸை சுத்தமான தண்ணீரில்
கழுவி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து
கொதிக்க வைக்கவும்.
- பின் அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக வேக
வைக்கவும்.
- அரிசியும் பருப்பும் பாதியளவு வெந்ததும் அதனுடன் தேவையான அளவு உப்பு
மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் மிளகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய
விடவும்.
- பின் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
- தக்காளியை சேர்த்து கிளறி நன்றாக மசித்து வரும் வரை வேகவிடவும்.
- பின் இந்த கலவையை அரிசி மற்றும் பருப்புடன் சேர்த்து கிளறி வேக
வைக்கவும்.
- அரிசி, பருப்பு, மற்றும் காய்கறிகள் நன்றாக வெந்ததும் அடுப்பை
அணைத்து ஆற வைத்து மிதமான சூட்டில் பரிமாறினால் சுவையான உடல்
ஆரோக்கியத்திற்கு ஏற்ற பாசி பயறு கஞ்சி தயார்!



Click it and Unblock the Notifications
