Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி தான் சமைப்பீங்களா? அடுத்தமுறை இப்படி குருமா செய்யுங்க.. நல்லா இருக்கும்..
Paneer Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் பன்னீரை அடிக்கடி சமைப்பீர்களா? எப்போதும் நீங்கள் பன்னீரை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா? பன்னீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா? இன்று உங்கள் வீட்டில் பன்னீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?
அப்படியானால் இந்த முறை பன்னீரைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த பன்னீர் குருமா சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பாதாம் - 10
* முந்திரி - 5
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
பிற பொருட்கள்...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புதினா - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த தக்காளி - 1 கப்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* துருவிய பன்னீர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பாதாம், முந்திரி, கசகசா
ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு தீயைக் குறைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்
மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட்டு மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகள் மற்றும் துருவிய பன்னீரையும் சேர்த்து
கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் பன்னீரை வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான பன்னீர் குருமா தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications











