Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
ருசியான... பன்னீர் முந்திரி கிரேவி
பன்னீரை பட்டர் மசாலாவை விட அற்புதமான ஒரு பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் பன்னீர் முந்திரி கிரேவி. இது சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
பால் பொருட்களில் ஒன்றான பன்னீரைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று என்றால் அது பன்னீர் பட்டர் மசாலா தான். ஆனால் இந்த பன்னீரை பட்டர் மசாலாவை விட அற்புதமான ஒரு பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் பன்னீர் முந்திரி கிரேவி. இது சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் முந்திரி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படியுங்கள். பின் அதை வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய கீரை இலைகள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தக்காளி - 4 (நறுக்கியது)
* முந்திரி - 15
* இஞ்சி - 2 இன்ச்
* வரமிளகாய் - 4-5
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.
* பொருட்கள் நன்கு வெந்ததும், அதை இறக்கி, குளிர வைத்து, பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருஞ்சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின்பு அரைத்த மசாலாவை ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை இலைகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் முந்திரி கிரேவி தயார்!



Click it and Unblock the Notifications











