Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
பலாக்கொட்டை வெச்சு ஒருமுறை இப்படி வறுவல் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Palakottai Varuval Recipe In Tamil: தற்போது பலாப்பழ சீசன் என்பதால், நிச்சயம் அனைவரும் இந்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டிருப்போம். இதனால் வீட்டில் பலாக்கொட்டைகளும் இருக்கும். இதுவரை பலாக்கொட்டைகளை நீங்கள் சாம்பாரில் சேர்த்து தான் சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த பலாக்கொட்டை கொண்டு வறுவல் செய்தால், மட்டன் வறுவலே தோற்றுப் போகும். அந்த அளவில் பலாக்கொட்டை வறுவல் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பலாக்கொட்டை வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்கொட்டை வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பலாக்கொட்டை - 1/4 கிலோ ( சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து பச்சை வாசனை போகவும், தக்காளி நன்கு வதங்கும் வரையும் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட பலாக் கொட்டையை சேர்த்து நன்கு 2-3
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 10
நிமிடம் பலாக்கொட்டையை வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது
அடிக்கடி கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை நன்கு வேக
வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பலாக்கொட்டை வறுவல்
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











