For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலக் பன்னீர் ரெசிபி /கீரை பன்னீர் கறி செய்வது எப்படி

பாலக் பன்னீர் ரெசிபி இந்திய துணைநாடுகளில் மிகவும் புகழ் பெற்றது. இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்

Posted By: R. SUGANTHI Rajalingam
|
செய்முறை விளக்கம் பாலக் பன்னீர் | பாலக் பன்னீர் செய்முறையை | Boldsky

பாலக் பன்னீர் ரெசிபி இந்திய துணைநாடுகளில் மிகவும் புகழ் பெற்றது. பொதுவாக இந்தியாவின் வடக்கு பகுதி மக்கள் இதை விரும்பி செய்கின்றனர். இதை அரிசி அல்லது ரொட்டிக்கு சைடிஸாக ருசிக்கின்றனர்.

ப்ரஷ்ஷான கீரையுடன், பாலாடைக்கட்டியை கொண்டு காரசாரமான மசாலாவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி மிகவும் சுவை மிகுந்தது. இந்த பாலக் பன்னீரில் ஏராளமான உடலுக்கு தேவையான ஆற்றல் கலோரிகள் நமக்கு கிடைக்கின்றன. கீரையின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. குழந்தைகளும் இதை விரும்பி உண்ணுவர்.

இது சுவையில் மட்டும்மல்ல பார்ப்பதற்கும் இதன் பச்சை நிறம் நம் நாவின் நரம்புகளை சப்புக் கொட்ட செய்து விடும். அப்படியே பன்னீரை வதக்கி இந்த கறியுடன் சேர்க்கும் போது ஏற்படும் சுவை தனி தான்.

சரி வாங்க இப்பொழுது இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம். இங்கே நான் ப்ரஷ் பன்னீரை மட்டுமே பயன்படுத்தி உள்ளேன்.

பாலக் பன்னீர்
பாலக் பன்னீர் /பாலக் பன்னீர் செய்வது எப்படி / பன்னீர் கீரை கறி ரெசிபி /பாலக் பன்னீர் கறி ரெசிபி
பாலக் பன்னீர் /பாலக் பன்னீர் செய்வது எப்படி / பன்னீர் கீரை கறி ரெசிபி /பாலக் பன்னீர் கறி ரெசிபி
Prep Time
10 Mins
Cook Time
20M
Total Time
30 Mins

Recipe By: மீனா பந்திரி

Recipe Type: சைடிஸ்

Serves: 2-3

Ingredients
  • கீரை - 200 கிராம் (2 கெட்டுகள்)

    தண்ணீர் - 1 கப்

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் +2 டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)

    தக்காளி - 1 கப் (சதுர வடிவில் நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 1 டீ ஸ்பூன் (நறுக்கியது)

    முழு முந்திரி பருப்பு - 4

    உப்பு - 1 டீ ஸ்பூன்

    சிவப்பு மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

    ப்ரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் +அலங்கரிக்க

    பன்னீர் துண்டுகள் - 1 கப்

Red Rice Kanda Poha
How to Prepare
  • ஒரு வடிகட்டும் பாத்திரத்தில் கீரையை எடுத்து 2-3 முறை அலசி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

    அதை இப்பொழுது ஒரு ப்ரஷ்ஷர் குக்கரில் சேர்க்கவும்

    ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரை வேக வைக்கவும்

    அதே சமயத்தில் அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

    பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்

    பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி பழத்தை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறவும்

    பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்

    இப்பொழுது முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வதக்கவும்

    குக்கரின் மூடியை திறந்து வேக வைத்த கீரையை ஒரு 10 நிமிடங்கள் ஆற வைக்கவும்

    வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி சாரில் போடவும்

    நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

    இப்பொழுது அரைத்த கலவையை அதில் கொட்டி நன்றாக வதக்கவும்

    இப்பொழுது 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்

    இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்

    இப்பொழுது மூடியை மூடி ஒரு நிமிடங்கள் சமைக்கவும்

    அதை வேக விடவும்

    இப்பொழுது வேக வைத்த கீரையை மிக்ஸி சாரில் சேர்க்கவும்

    நன்றாக வழுவழுப்பாக மிதமான பதத்தில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்

    இப்பொழுது அரைத்த கீரையை கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்க்கவும்

    மறுபடியும் மூடியை மூடி ஒரு நிமிடம் வரை சமைக்கவும்

    பிறகு மூடியை திறந்து நறுக்கி வைத்த பன்னீரை கறியில் சேர்க்கவும்

    பிறகு அதை ஒரு பெளலிற்கு மாற்றி ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்

    சூடாக பரிமாறவும்

    சுடச்சுட சுவையான பாலக் பன்னீர் ரெசிபி ரெடியாச்சு.

Instructions
  • கீரையை தண்ணீரில் 2-3 முறை நன்றாக அலசிக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் அதிலிருக்கும் தூசி மற்றும் மண்துகள்கள் போகும்
  • பன்னீர் துண்டுகளை லேசாக வறுத்து கூட செய்தால் ரெசிபி இன்னும் சுவையாக இருக்கும்
  • கிரேவிக்கான பொருட்களை அரைக்கும் போது வழுவழுப்பாக அரைத்துக் கொள்வது நல்லது
  • க்ரீம் மற்றும் முந்திரி பருப்பு சேர்ப்பது இந்த டிஸ்யை இன்னும் ஆடம்பரமாகவும் சுவையாகவும் காட்டும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 முறை
  • கலோரிகள் - 289 கலோரிகள்
  • கொழுப்பு - 11 கிராம்
  • புரோட்டீன் - 12 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 38 கிராம்
  • சர்க்கரை - 5 கிராம்
  • நார்ச்சத்து - 6 கிராம்.

படத்துடன் செய்முறை விளக்கம் : பாலக் பன்னீர் செய்வது எப்படி

ஒரு வடிகட்டும் பாத்திரத்தில் கீரையை எடுத்து 2-3 முறை அலசி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

அதை இப்பொழுது ஒரு ப்ரஷ்ஷர் குக்கரில் சேர்க்கவும்

ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரை வேக வைக்கவும்

அதே சமயத்தில் அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்

பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி பழத்தை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறவும்

பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்

இப்பொழுது முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வதக்கவும்

குக்கரின் மூடியை திறந்து வேக வைத்த கீரையை ஒரு 10 நிமிடங்கள் ஆற வைக்கவும்

வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி சாரில் போடவும்

நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

இப்பொழுது அரைத்த கலவையை அதில் கொட்டி நன்றாக வதக்கவும்

இப்பொழுது 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்

இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்

இப்பொழுது மூடியை மூடி ஒரு நிமிடங்கள் சமைக்கவும்

அதை வேக விடவும்

இப்பொழுது வேக வைத்த கீரையை மிக்ஸி சாரில் சேர்க்கவும்

நன்றாக வழுவழுப்பாக மிதமான பதத்தில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்

இப்பொழுது அரைத்த கீரையை கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்க்கவும்

மறுபடியும் மூடியை மூடி ஒரு நிமிடம் வரை சமைக்கவும்

பிறகு மூடியை திறந்து நறுக்கி வைத்த பன்னீரை கறியில் சேர்க்கவும்

பிறகு அதை ஒரு பெளலிற்கு மாற்றி ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்

சூடாக பரிமாறவும்

சுடச்சுட சுவையான பாலக் பன்னீர் ரெசிபி ரெடியாச்சு.

[ 4.5 of 5 - 22 Users]
English summary

பாலக் பன்னீர் /பாலக் பன்னீர் செய்வது எப்படி / பன்னீர் கீரை கறி ரெசிபி /பாலக் பன்னீர் கறி ரெசிபி

palak-paneer
Desktop Bottom Promotion