Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
Kerala Style Mango Payasam Recipe in Tamil: பாயாசம் என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கியமான உணவாகும். அதிலும் திருமணத்தில் பாயாசம் இல்லாமல் இருக்காது.. பேச்சு வழக்கில் பாயசத்தை பாயாசம் என்று சொல்ல ஆரம்பித்தனர்.. இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு.

கேரளாவில் செய்யப்படும் பாயாசம் தமிழ்நாட்டில் செய்யப்படும் பாயாசத்தை போல அல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். கேரளாவில் அரிசி, பலாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை வைத்து பாயாசம் செய்வார்கள். கோடைகாலத்தில் மாம்பழ சீசன் தொடங்குவதால் அதை வைத்தும் சுவையான பாயாசம் செய்வார்கள். இந்த மாம்பழ பாயாசம் மற்ற பாயாசங்களை விட தனித்துவமானது மற்றும் கூடுதல் சுவையானது.
உங்களுக்கு சுவையான கேரளா ஸ்டைல் மாம்பழ பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மாம்பழ பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மாம்பழம் - 4 (நன்றாக பழுத்தது)
- வெல்லம் - 1 கப்
- தேங்காய் - 2 ½ மூடி
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி - 10
- திராட்சை - 15
- ஏலக்காய் - 2
- தேங்காய் - ½ மூடி
- சுக்கு தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
- முதலில் மாம்பழத்தை சுத்தமாக கழுவி நறுக்கி அதனுள் இருக்கும் சதை பகுதியை வெட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- வெட்டி எடுத்துக் கொண்ட மாம்பழத்தின் சதை பகுதிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெல்லத்தை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- வெல்லம் தண்ணீருடன் நன்றாக கரைந்ததும் வடித்து தூசி மற்றும் மண்ணை நீக்கி எடுத்து கொள்ளவும்.
- பின் இரண்டு மூடி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்துக் கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து பால் பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும்.
- மீண்டும் அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் பிழிந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
- நன்கு வெந்து கெட்டியாக துவங்கியதும் அதனுடன் வடித்து வைத்த வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் அதனுடன் இரண்டாவது முறை அரைத்து எடுத்த தேங்காய் பாலை சேர்த்து மிதமான தீயில் கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும்.
- கடைசியாக இதனுடன் கெட்டியாக அரைத்து எடுத்து வைத்த தேங்காய்ப்பால், உப்பு, மற்றும் சுக்கு பொடி சேர்த்து கட்டிகள் சேராமல் நன்கு கலந்து விடவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விடவும்.
- நெய் சூடானதும் அதில் எடுத்து வைத்த முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- அதனுடன் ஏலக்காய் மற்றும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து வறுத்து அதை பாயாசத்துடன் சேர்த்து கிளறினால் நாள்சுவையான மாம்பழ பாயாசம் தயார்!



Click it and Unblock the Notifications