Latest Updates
-
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்...
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
Vastu Tips For Owl Statue In Tamil: நாம் அனைவருமே செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். இதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தும் வருகிறோம். ஆனால் என்ன தான் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சம்பாதித்தாலும், நாம் குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளின் படியும், வீட்டில் உள்ள பொருட்கள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையில் சரியான இடத்தில், சரியான திசையில் இல்லாட்டால், வந்த வேகத்திலேயே பணம் கையில் நிலைக்காமல் கரையும். இந்நிலையில் நிறைய பேர் தங்கள் வீடுகளில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்களை வாங்கி வைப்பார்கள். அதில் ஒன்று தான் ஆந்தை சிலை.

இந்து மதத்தில் மட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரத்திலும் ஆந்தை ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அதுவும் ஆந்தை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வாகனம். இந்த ஆந்தை குறித்த பல நம்பிக்கைகள் நம் சமூகத்தில் உள்ள. சாஸ்திரங்களில் ஆந்தை மங்களகரமானதாகக் கருதப்பட்டாலும், பல இடங்களில் அது அமங்களகரமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில், ஒருவர் ஆந்தையை கண்டால், அந்த நபருக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும் என்றும், அவர் பெரும் செல்வந்தராகப் போகிறார் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் ஒரு பெரிய நோயால் பாதிக்கப்பட்ட நபரை ஆந்தை தொட்டால், அவர் அந்நோயில் இருந்து குணமடைவதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆந்தையை ஒருவர் பகல் வேளையில் கண்டால் மங்களரமானதாக கருதப்படுகிறது. அதாவது அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, வாழ்வில் எதிர்பாராத ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்பதைக் குறிக்கிறது
முக்கியமாக ஆந்தையை ஒருவர் வலது பக்கத்தில் பார்ப்பது அபசகுனமாகவும், அதுவே இடது பக்கத்தில் பார்த்தால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இப்படி ஆந்தை குறித்து பல்வேறு நம்பிக்கைகள் இருப்பதால், இந்த ஆந்தையின் நிலையை வீட்டில் வைக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் எழும். இப்போது ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாமா மற்றும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.
ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாமா?
ஆந்தைகள் மிகவும் புத்திசாலியான பறவையாக கருதப்படுகின்றன. இந்த சிலையை வீட்டில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக இது வீட்டில் உள்ளோரின் கவனத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு அந்த ஆந்தை சிலையை வீட்டில் சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் நல்ல அதிர்ஷ்டத்துடன், செல்வமும் கிடைக்கும்.
ஆந்தை சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?
வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதுவும் இந்த சிலையை வீட்டின் எந்த அறையிலும் வைக்கலாம். இருப்பினும் படுக்கை அறையில் வைப்பது மிகவும் நல்லது.
வீட்டில் ஆந்தை சிலையை வைத்திருந்தால், அது வீட்டில் சாதகமான சூழலை உருவாக்கவும், கண் திருஷ்டியினால் சந்திக்கும் தீய விளைவுகளை தடுக்கவும், வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அதிகரிக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது.
கூடுதலாக ஆந்தை சிலையை தரையில் வைக்க வேண்டும். இது தவிர இந்த சிலையை வீட்டின் ஹால், படிக்கும் அறை, பூஜை அறை போன்ற இடங்களிலும் வைக்கலாம். இதனால் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சீராக இருக்கும்.
இருப்பினும் ஆந்தை சிலையை வைக்கும் போது, அந்த சிலை கதவை பார்த்தவாறு இருக்க வேண்டும். இதன் மூலம், அது வீட்டிற்கு சந்தோஷத்தை கொண்டு வரும். ஒருவேளை சிலையை வைக்காவிட்டால், ஆந்தையின் போட்டோவை கூட வீட்டில் வைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
