Latest Updates
-
10 வரமிளகாயும், 10 பல் பூண்டும் இருந்தா.. 5 நிமிடத்தில் இப்படி சட்னி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வண்டி ஓட்டணும்... இல்லனா ஆபத்து தேடிவரும்...! -
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... -
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்! -
நெகட்டிவா யோசிக்கிறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் மிஞ்ச முடியாதாம்... உங்க ராசி என்ன? -
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளாலும் ஜெயிக்கவே முடியாத தமிழ்நாட்டின் 2 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படப்போகுது..
மாலை வேளையில் சாப்பிட ஏற்ற... சத்தான... பால் கொழுக்கட்டை
Paal Kozhukattai: ஆடி வெள்ளிக்கிழமையில் பலர் தங்கள் வீடுகளில் இனிப்புக்களை ஏதாவது செய்து அம்மனுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் அப்படியானால், இந்த ஆடி வெள்ளிக்கிழமையில் கொழுக்கட்டை செய்யுங்கள்.
அதுவும் பால் கொழுக்கட்டையை செய்யுங்கள். வழக்கமாக பால் கொழுக்கட்டையில் வெல்லப்பாகு சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் இன்று பார்க்கப் போகும் பால் கொழுக்கட்டை சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டிருக்கும்.

முக்கியமாக இந்த பால் கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும், எளிதில் செய்யக்கூடியவாறும் இருக்கும். உங்களுக்கு பால் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பால் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சுடுநீர் - 1 கப்
* பால் - 3 கப்
* தண்ணீர் - 1 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* தேங்காய் பால் - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் அரிசி மாவை எடுத்து, உப்பு மற்றும் நெய்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஸ்பூன் பயன்படுத்தி
கிளறி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைய
வேண்டும்.
* பின்பு கையில் நெய்யைத் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு
உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு 8-10 நிமிடம்
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பாலானது சுண்டி, கொழுக்கட்டை வெந்ததும், சர்க்கரையை சேர்த்து கிளறி,
4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி, ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











