For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வஞ்சிரம் சில்லி ஃ பிஷ் ரெசிபி

By Mayura Akilan
|

Vanchiram Fry
வஞ்சிரம் மீன் முள் அதிகம் இல்லாதது. அது குழந்தைகளுக்கு ஏற்றது. இந்த மீனை சிறு துண்டுகளாக போட்டு பொரியல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஒமேகா எண்ணெய் உள்ள இந்த மீன் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் - அரை கிலோ
மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
மல்லித்தூய் – 2 டீஸ் பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ் பூன்
கன்ஃப்ளவர் மாவு 2 டீஸ் பூன்
எலுமிச்சை 1
இஞ்சி பூண்டு 2 டீஸ் பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க தேவையானது

சில்லி மீன் வறுவல் செய்முறை

முதலில் வஞ்சிரம் மீனை நன்கு கழுவி ஆட்காட்டி விரல் நீள அகலத்திற்கு வெட்டிக்கொள்ளவும். அதனை அகற்ற பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிசிறவும். பின்னர் கான்ஃப்ளவர் மாவு, உப்பு, எலுமிச்சையை பிழிந்து விட்டு அனைத்து மீன் தூண்டுகளின் மீது படுமாறு பிசிறவும். மீன் துண்டு கலவையை நன்கு மூடி ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி ஐந்தைந்து துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான வஞ்சிரம் மீன் பொரியல் தயார். முள் இல்லாத மீன் என்பதால் குழந்தைகள் ஆவலுடன் சாப்பிடுவார்கள். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

English summary

Vanchiram chilli fish fry recipe | வஞ்சிரம் சில்லி ஃ பிஷ் ரெசிபி

One of the main items in a complete South Indian seafood meal is Vanchiram fish fry. It has to be one of the easiest yet can made be made in different varieties.
Story first published: Wednesday, February 15, 2012, 16:09 [IST]
Desktop Bottom Promotion