For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா

By Maha
|

இன்று ரம்ஜான் நோன்பு ஸ்பெஷலாக, தமிழ் போல்ட் ஸ்கை அருமையான ஒரு மட்டன் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அந்த ரெசிபியானது மிகவும் எளிமையான செய்முறையை கொண்டிருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். அந்த ரெசிபியின் பெயர் முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா.

ஆம், இந்த மட்டன் குருமாவானது ஒரு முகலாய ரெசிபி. சரி, இப்போது அந்த முகலாய் ஸ்டைல் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Ramzan Special: Mughalai Mutton Korma

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது)
வெங்காயம் - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
க்ரீம் - 1/4 கப்
கோவா - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சுண்ட காய்ச்சிய பால் - 1/4 கப்
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
ஜாதிபத்திரி பவுடர் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எணணெய் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் சேர்த்து 5-6 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின்பு தயிரை நன்கு அடித்து அத்துடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு, க்ரீம், கோவா மற்றும் சுண்ட வைத்த பாலை ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 20-30 நிமிடம் மட்டனை நன்கு வேக வைக்க வேண்டும்.

மட்டனானது நன்கு வெந்ததும், அதில் ஜாதிக்காய் பொடி மற்றும் ஜாதிபத்திரி பவுடர் தூவி கிளறி இறக்கினால், முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!

Recipe And Image Courtesy: Ms. Rana Safvi

English summary

Ramzan Special: Mughalai Mutton Korma

Take a look at this special Ramzan recipe of mutton korma and definitely give it a try. This Mutton korma is a part of the Mughalai cuisine. 
Story first published: Saturday, July 12, 2014, 12:46 [IST]
Desktop Bottom Promotion