கொத்தமல்லி சிக்கன் குருமா

Posted By:
Subscribe to Boldsky

இதுவரை மிளகு சிக்கன், பூண்டு சிக்கன், சில்லி சிக்கன் எல்லாம் சுவைத்திருப்பீர்கள். ஆனால் கொத்தமல்லி சிக்கன் குருமாவை சுவைத்ததுண்டா? ஆம், இந்த சிக்கன் குருமாவானது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். மேலும் இது வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

இது வட இந்தியாவில் பிரபலமான ஒரு டிஷ். சரி, இப்போது அந்த கொத்தமல்லி சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Murg Dhania Korma Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

தயிர் - 1 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - 2 கட்டு (சுத்தம் செய்து, லேசாக அரைத்துக் கொள்ளவும்)

கரம் மசாலா - 2 டீஸ்பூன்

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 10 (நறுக்கியது)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் கொத்தமல்லியை சுத்தம் செய்து, மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், சிக்கனை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் தயிர், வதக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கிரேவி ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் அரைத்த கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கொத்தமல்லி சிக்கன் குருமா ரெடி!!!

English summary

Murg Dhania Korma Recipe

Murg Dhania Korma Recipe is one of the tasty chicken korma recipes. It is also called dhania korma chicken or dahi korma chicken.
Story first published: Wednesday, July 22, 2015, 13:31 [IST]