சன்டே ஸ்பெஷல்: சிக்கன் குழம்பு

Posted By:
Subscribe to Boldsky

ஞாயிற்றுகிழமைகளில் வீட்டு வேலை அதிகம் செய்து களைத்துவிட்டீர்களா? மதியம் சமைப்பதற்கு சிக்கனை வாங்கிவிட்டீர்களா? அப்படியெனில் 20 நிமிடங்களில் சிக்கன் குழம்பு செய்ய வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு மிகவும் சிம்பிளாக செய்யக்கூடிய ஒரு சிக்கன் குழம்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெசிபியின் ஸ்பெஷல், இந்த குழம்பில் தயிர் சேர்க்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்ற பார்ப்போமா!!!

Low Fat Chicken Curry With Curd Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

தயிர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு, குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் தயிர் சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சிக்கன் குழம்பு ரெடி!!!

English summary

Low Fat Chicken Curry With Curd Recipe

Have you tried this low fat chicken recipe curry with a dollop of curd? If not, try this yummy Indian chicken curry recipe.
Story first published: Saturday, June 13, 2015, 12:48 [IST]
Subscribe Newsletter