காடை முட்டை குழம்பு

Posted By:
Subscribe to Boldsky

கோழி முட்டையை விட காடை முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் காடை முட்டையை பச்சையாக குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா?

இங்கு அந்த காடை முட்டையைக் கொண்டு குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kaada Muttai Kuzhambu

தேவையான பொருட்கள்:

காடை முட்டை - 20
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (அரைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!

English summary

Kaada Muttai Kuzhambu/Quail Egg Curry

Do you know how to prepare kaada muttai kuzhambu or quail egg curry? Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter