Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
No Tomato No Onion Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அதற்கு கார சட்னி அரைக்க சென்றால், வெங்காயம், தக்காளி இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். வெங்காயம் தக்காளி இல்லாமலேயே சுவையான கார சட்னியை செய்யலாம்.
இந்த கார சட்னிக்கு பூண்டு இருந்தாலே போதுமானது. இந்த கார சட்னியை செய்தால் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். கெட்டுப் போகாது. அதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல் வெளியில் வைத்தே 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - எலுமிச்சை அளவு
* பூண்டு - 30 பல்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வர மல்லி - 1 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 துண்டு
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, ஓரளவு கெட்டியாக சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு பற்களை சேர்த்து லேசாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, அரைத்த வர மல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
குறைவான தீயில் வைத்து, பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, குறைவான
தீயில் வைத்து, 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக வெல்லத்தை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால்
உப்பையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











