Latest Updates
-
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...!
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க..
No Gas No Oil No Boil Idicha Thayir Chutney Recipe In Tamil: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தற்போது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் கேஸை மிச்சப்படுத்த, அடுப்பை பயன்படுத்தாமல் சமைக்கக்கூடிய ரெசிபிக்களை தெரிந்து கொண்டு, அவற்றை செய்ய முயற்சிக்கிறார்கள். நீங்களும் அப்படி அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ரெசிபிக்களை தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களா?
ஏற்கனவே நாம் அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம், அவல் பாயாசம், தக்காளி வெங்காய பச்சடி போன்ற ரெசிபிக்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கப் போவது அடுப்பில்லாமல் செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னியைத் தான். இந்த சட்னியானது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக சமைக்க பிடிக்காத நேரத்தில், குறிப்பாக கோடைக்காலத்தில் இப்படியான ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், நிச்சயம் உங்களின் சமையலை எளிதாக்கும்.

உங்களுக்கு இடிச்ச தயிர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இடிச்ச தயிர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 8
* கொத்தமல்லி - சிறிது
* கெட்டி தயிர் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு.. (விருப்பமிருந்தால்)
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் இடி கல்லில் 10 பல் பூண்டு மற்றும் 2 பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 8 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து சிறிது கொத்தமல்லியை சேர்த்து அரைக்க வேண்டும்.
* பிறகு அத்துடன் 1/4 கப் கெட்டி தயிரை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1 டீஸ்பூன் மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், இடிச்ச
தயிர் சட்னி தயார்.
* ஒருவேளை உங்கள் வீட்டில் கேஸ் இருந்தால், அத்துடன் தாளிப்பை
சேர்க்கலாம். அதை தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











