Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
நாவூறும்.. மொறுமொறுப்பான... நெத்திலி கருவாடு வறுவலை எப்படி ஈஸியா செய்றதுன்னு பாருங்க...
Nethili Karuvadu Fry Recipe In Tamil: உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கருவாடு சாப்பிடமாட்டார்களா? அதனாலேயே வீட்டில் கருவாட்டை அதிகம் செய்யமாட்டீர்களா? ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு கருவாட்டை சமைத்தால், கருவாடு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக மீண்டும் மீண்டும் செய்து கொடுக்க கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.
கருவாட்டில் நெத்திலி கருவாடு அட்டகாசமான சுவையைக் கொண்டிருப்பதோடு, சாப்பிடவும் நன்றாக இருக்கும். அந்த நெத்திலி கருவாட்டை வறுவல் செய்தால், தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு நெத்திலி கருவாடு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெத்திலி எளிய முறையில் கருவாடு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெத்திலி கருவாடு - 250 கிராம்
* சின்ன வெங்காயம் - 10-12 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4-5 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கையளவு
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுடுநீரில் கருவாட்டை போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின்
அதில் தலை இருந்தால், அதை நீக்கிவிட்டு, கருவாட்டிற்கு நடுவே கருப்பாக
இருக்கும் குடலை நீக்கிவிட்டு, 4-5 முறை குளிர்ந்த நீரில் நன்கு அலசி
தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாராளமாக எண்ணெய் ஊற்றிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து
நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள் தூவி நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், குழம்பு மிளகாய் தூள்
மற்றும் அளவாக உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். ஏற்கனவே
கருவாட்டில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக உப்பு சேர்க்க
வேண்டும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள கருவாட்டை சேர்த்து நன்கு கிளறி, மூடி
வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து
கருவாட்டை கிளறி விட வேண்டும். கருவாடு சற்று மொறுமொறுப்பாக மாறும்
போது அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான நெத்திலி கருவாடு வறுவல்
தயார்.
Image Courtesy: SAMAYAL SUPER



Click it and Unblock the Notifications











