Latest Updates
-
மார்ச் 1 முதல் புது ரூல்ஸ்.. பேங்க் பேலன்ஸ் லிமிட், UPI பண பரிமாற்றம்.. ஒரே நேரத்தில் 6 முக்கிய மாற்றங்கள்! | New Bank UPI Rules from March 1 -
செட்டிநாடு முட்டைக்கோஸ் கூட்டு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு செம சைடிஷா இருக்கும் -
ராகு கும்ப ராசிக்கு செல்வதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்..உங்க ராசி இதுல இருக்கா -
அப்படி போடு.. தங்கம், வெள்ளியின் மதிப்பை நிர்ணயம் செய்ய புது ரூல்ஸ்.. ஏப்ரல் 1 முதல் அமல்! | SEBI New Gold and silver ETF Rules -
புது ரூல்ஸ்.. மார்ச்.1 முதல் அமல்.. சிம் கார்டு முதல் ரயில் டிக்கெட் வரை.. என்னென்ன மாறுது.. இதோ முழு விவரம்.. | March 1 new rules -
மதுரை ஸ்டைல் சிக்கன் தொக்கு ரெசிபி... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... ட்ரை பண்ணி பாருங்க...! -
புதன் வக்ர பெயர்ச்சியால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
நாவூறும் மட்டன் மசாலா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 01 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு நஷ்டங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
நாவூறும்.. மட்டன் நெய் ரோஸ்ட் - வீட்லயே சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Mutton Ghee Roast Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி மட்டன் எடுப்பீர்களா? எப்போது மட்டன் எடுத்தாலும் ஒரே சுவையில் தான் மட்டன் குழம்பு, வறுவல் என்று செய்வீர்களா? சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை சுவைக்க நினைத்தால், கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை மட்டன் வாங்கினால், ஒரே மாதிரி மட்டன் குழம்பை சமைக்காமல், மட்டன் நெய் ரோஸ்ட்டை செய்யுங்கள். இந்த பக்குவத்தில் மட்டன் நெய் ரோஸ்ட் செய்தால், பின் அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பார்கள். முக்கியமாக இந்த மட்டன் நெய் ரோஸ்ட்டை செய்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு மட்டன் நெய் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் நெய் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மட்டன் - 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு..
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
ரோஸ்ட் செய்வதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, கழுவி
வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு
கிளறி, மட்டனில் இருந்து நீர் விட்டு வற்றும் வரை வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு, வரமிளகாய்
மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக
அரைத்துக் கொண்டு, பின் சிறிது நீரை ஊற்றி அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,
வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து,
உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, நன்கு
சுருள வதக்கி இறக்கினால், சுவையான மட்டன் நெய் ரோஸ்ட் தயார்.



Click it and Unblock the Notifications











