Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கிராமத்து ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Village Style Chicken Sinthamani Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? வழக்கமாக சிக்கன் வாங்கினால் வறுவல், 65 என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் சிந்தாமணியை செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.
இந்த சிக்கன் சிந்தாமணியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி இதை செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். நன்கு காரசாரமாக இருப்பதால், சளி பிடித்திருக்கும் போது சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் சிக்கன் சிந்தாமணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 150 கிராம்
* கடலை எண்ணெய் - 50 மிலி
* சின்ன வெங்காயம் - 250 கிராம் (நீளவாக்கில் மெல்லியதாக
நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 10 பல் (தட்டியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* நாட்டுக்கோழி - 1 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் - 2 கைப்பிடி
* சீரகம் - 2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வரமிளகாயின் காம்புகள் மற்றும் அதில் உள்ள விதைகளை
நீக்கிவிட்டு, நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி,
வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை தட்டி சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து மஞ்சள் சேர்த்து கழுவி வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து,
நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு வதக்க விட வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, தேங்காய் துண்டுகளை
சேர்த்து கோழி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி மூடி வைத்து 20-25 நிமிடம்
நன்கு கோழியை வேக வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மூடியைத் திறக்கும் போது, நீர் வற்றியிருந்தால்,
அதில் சீரகத்தை கைகளால் நசுக்கி சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி, கறிவேப்பிலை தூவி
பிரட்டி இறக்கினால், சுவையான சிக்கன் சிந்தாமணி தயார்.



Click it and Unblock the Notifications