Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கிராமத்து சுவையில் மிளகு கோழி வறுவல் - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Village Style Pepper Chicken Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் இன்று சிக்கன் எடுத்துள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சளி பிடித்திருந்தால், மிளகு கோழி வறுவலை செய்யுங்கள். அதுவும் கிராமத்து சுவையில் இந்த வறுவலை செய்து சாப்பிடுங்கள்.
இந்த வறுவலை மிளகு ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சளி முறிந்து, விரைவில் சளி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். முக்கியமாக இந்த வறுவலை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் சுவை அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து சுவையில் சிக்கன் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து சுவையில் சிக்கன் மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* சுடுநீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, நீரில் 2 முறை
நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் 4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு பற்கள் மற்றும்
துருவிய இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும்
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லி, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி விட
வேண்டும்.
* அடுத்து சுவைக்கேற்ப உப்பு தூவி, 1/2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி,
மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து
சுவையில் மிளகு கோழி வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications